யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (28) இரவு மல்லாகம் நீதவான் முன்னிலையில் இந்திய மீனவர்கள் 13 பேரும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்றைய தினம் அதிகாலை இந்திய மீனவர்கள் 13 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டபோது, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
இதன்போது கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு இந்திய மீனவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.



