‘சரத் என் சில்வா பிரதமநீதியரசராக பதவியேற்கும் படத்தை தலைகீழாக பிரசுரித்து நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என தலைப்பிட்டவர் விக்டர் ஐவன் “

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்கும் படத்தை ராவயவில் விக்டர் ஐவன் தலைகீழாக பிரசுரித்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என  குறிப்பிட்டிருந்ததை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்  முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அச்சமற்ற துணிச்சலான ஒருமனிதர் . அவர் பலசெல்வாக்குமிகுந்த நபர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார் அவர்களில் ஒருவர் இலங்கையின் சட்டமா அதிபராக பிரதம நீதியரசராக பதவி வகித்த சரத் என். சில்வா.

சரத்என்சில்வா பிரதமநீதியரசராக பதவியேற்றதை  ராவயவின் தலைப்புச்செய்தியாக வெளியிட்டடிருந்தது- இலங்கையின்  நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என  குறிப்பிட்டிருந்தது.

 

சரத்என்சில்வா பதவியேற்கும் படத்தை தலைகீழாக வெளியிட்டு இலங்கையின். நீதித்துறையின் மரணம் என ராவய தலைப்பிட்டிருந்தது.

அடுத்த பத்து வருடங்களில் விக்டர் ஐவன் சரத்சில்வாவுடன் பல சந்தர்ப்பங்களில் மோதினார்.

தனது பதவிக்காலத்தில் சரத்என்சில்வா பலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சுமத்திய போதிலும் விக்டர் ஐவனிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு எதனையும் சுமத்தவில்லை.

இவ்வாறான நபர்களையே மியன்மாரின் ஆங் சாங் சூ கி தனது வாழ்க்கை வரலாற்று நூலில் அச்சமற்றவர்கள் என குறிப்பிடுகின்றார்.

‘ தனிநபர் அல்லது தேசத்தின் பெரும்கொடை என்னவென்றால் அச்சமற்றவராக விளங்குதல்,அது உடல் ரீதியில் துணிச்சல் கொண்டவராக விளங்குவது மாத்திரமில்லை,மனதிலும் அச்சமற்றவராகயிருத்தல்.”