சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து குழந்தை சடலமாக மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தை சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.  சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.