13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ்மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியற் கட்சிகள் எதிர்க்க வேண்டும். அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்குதமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (17.01.2025) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.





