ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின்படி, விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே வெகுவிரைவில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.




