யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (24.01.2025) காலை தொடக்கம் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை (25.01.2025) மாலையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும், மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடந்த பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.




