இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முல்லேரியா -உடமுல்ல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 02 கிலோ 218 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லேரியா பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் செலுத்துனராக உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த ஹெரோயின் போதைப்பொருள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “கொத அசங்க” என்பவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



