வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் திங்கட்கிழமை (27.01.2025) யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாகப் பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமநீ னம் வழங்குமாறு கோரியும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் வடக்கு ஆளுநரிடம் மனுவொன்றையும் சமர்ப்பித்தனர்.



