வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை வேனில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு, கொத்தலாவல பிரதேசத்தில் சந்தேகத்திறிகிடமான முறையில் பயணித்த வேன் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 47,200 வெளிநாட்டு சிகரட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.