வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) இரவு வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் என்கிற பகுதியிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் அந்த நபர் கரப்பொல – முத்துக்கல் வழியாக சேனபுர பகுதிக்கு வெள்ள நீரை கடந்து சென்றுகொண்டிருந்தபோதே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரது மனைவி மற்றும் மற்றைய நபர் மரக்கிளை ஒன்றினைப் பிடித்தவாறு உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெலிகந்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.