அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகளை நன்கொடையாக வழங்கிய அமெரிக்க பெண்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கைகளை நன்கொடையாக ஜேப் ஜாப்சென் என்ற அமெரிக்க பெண் வழங்கியுள்ளார்.

இந்தப் பெண் இதய நோயினால் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்துள்ளார்.

அவர் வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டியதுடன், தனது உயிரைக் காப்பாற்றிய  வைத்திய பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் புபுது ரணவீர மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர்களிடம் படுக்கைகளை கையளித்துள்ளார்.