அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது நேற்று புதன்கிழமை (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ நிலக்கடலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ  உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும், ஒரு கிலோ  சிவப்பு கௌபி 765 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு 940 ரூபாவாகவும், ஒரு கிலோ  காய்ந்த மிளகாய் 830 ரூபாவாகவும், ஒரு கிலோ  பாசுமதி (பாஸ்மதி) அரிசி 645 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 230 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 288 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 240 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.