அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (15) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
லுனுகம்வெஹெர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லுனுகம்வெஹெர பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 7,322 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





