நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் மூர்க்கத்தனமானவை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீட்டில் தேங்காய் சம்பல் செய்வதாலும், உணவுக்கு தேங்காய் பயன்படுத்துவதாலும் தேங்காய்க்கு தட்டுப்பாடு என்று பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.
காட்டு விலங்குகளினால் விவசாய பயிர்கள் நாசமடைகிறது. அதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.
கடந்த காலங்களில் வீடுகளில் தேங்காய் உணவுக்கு பயன்படுத்தவில்லையா, காட்டு விலங்குகள் வாழவில்லையா ? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



