நேற்று முன்தினம் வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்த அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வீழ்ந்ததில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜாவிற்கு தற்போது 82 வயது.



