தமிழ்மக்களின் உரிமைகளை அடியோடு மறுதலிக்கும் வகையில் சிறிலங்கா அரசினால் கொண்டுவரப்படவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பின் ஆபத்துக்கள் மற்றும் அந்த வரைபை நிராகரிக்க வேண்டியதன் அவசியம், தமிழ்மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தமிழ்த்தேசம், அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை வலியுறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பான ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-01-2025) பிற்பகல்- 12.30 மணி தொடக்கம் மாலை-03.30 மணி வரை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது. இக் கலந்துரையாடலில் நேரடியாகப் பங்குபற்ற ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.


