கற்பிட்டியில் கேரள கஞ்சாவுடன் 09 பேர் கைது !

புத்தளம்- கற்பிட்டிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்அடிய பிரதேசத்தில், கேரள கஞ்சா வைத்திருந்த 09 சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 27 தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட தலவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 09 கிலோகிராம் 200 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.