கொக்குவில் அஞ்சலகத்தில் தற்காலிக அடிப்படையில் பல வருட காலமாக அஞ்சல் உதவியாளராகக் கடமையாற்றி வந்த கொக்குவிலைச் சேர்ந்தவர் கல்லீரல் செயலிழப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா உதயசங்கர் (வயது- 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தபால் ஊழியர் கடந்த வியாழக்கிழமை(23.01.2025) அதிகாலை- 01.30 மணியளவில் வழுக்கி விழுந்து சிறு காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(24.01.2025) மதியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் மாலை- 05.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்குக் கல்லீரல் செயலிழப்பே காரணமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



