களுத்துறை தெற்கு, நாகொடை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் களுத்துறை பொலிஸார் இணைந்து தீப்பரலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




