கிராந்துருகோட்டையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய அறுவர் கைது !

பதுளை, கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிதாக கூறப்படும் ஆறு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிராந்துருகோட்டை,  அகலஓயா, அலுத்தரம மற்றும் பசறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் மண்வெட்டி, கோடாரி, இரும்பு பொருட்கள் மற்றும் சுத்தியல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.