தெல்தெனிய நீர் விநியோகத் திட்டத்திற்காக பல கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட குழாய்கள் வெறுமனே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், மேற்படி நீர் விநியோகத் திட்டத்தைத் துரிதப்படுத்தித் தரும்படியும் உள்ளூராட்சி அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற தெல்தெனிய பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் இதனைச் சுட்டிக்காட்டினர்.
மெததும்பர பிரதேச செயலாளர் நுவன் ஹேகுமார தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மேற்படி வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி தெல்தெனிய நீர் விநியோகத் திட்டத்திற்கு ஹுலுகங்கையிலிருந்து நீர் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெல்தெனிய பிரதேசத்தில் வசிக்கின்றனர்.





