களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மில்லகஸ்ஹந்திய பிரதேசத்தில் கெப் வாகனத்தில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்ற பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பண்டாரகம கிதெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆணும் 43 வயதுடைய பெண்ணும் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம், சட்டவிரோத மதுபான விற்பனை செய்து சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 121,298 ரூபா பணம் மற்றும் கெப் வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





