கொக்குவிலில் போயாக் கருத்துரையும் கலந்துரையாடலும்

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் மாதாந்தப் போயாக் கருத்துரையும் கலந்துரையாடலும் நிகழ்வு புதன்கிழமை (12.02.2025) மாலை-04 மணியளவில் கே.கே.எஸ் வீதி, கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

தேசியகல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் வே.சேந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் “பொருளாதார நெருக்கடிகளும் சமூக மாறுதல்களும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் வி.பி.சிவநாதன் கலந்து கொண்டு கருத்துரை வழங்குவார். கருத்துரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெறும்.