கொழும்பில் ஐஸ் போதைப்பொருள், பணத்துடன் ஒருவர் கைது

கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12  பகுதியில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 620 மில்லி கிராம் ஐஸ்  போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த 130,000 ரூபா பணம் என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.