கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்கள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்று வெளியேறிப் பரீட்சைத் திணைக்களம் நடாத்திய இறுதித் தேர்வில் சித்தியடைந்த 174 ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (11.01.2025) பிற்பகல்-02 மணி முதல் கலாசாலையின்  ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் சந்திரமெளலீசன் லலீசன் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.