கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வாராந்த ஒன்றுகூடலில் சிறப்புக் கருத்துரை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் வாராந்த ஒன்றுகூடல் நிகழ்வு புதன்கிழமை (05.02.2025) காலை-08.30 மணியளவில் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரித்தானியா கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகக் கல்லூரியின் கணினித் துறை முன்னாள் விரிவுரையாளர் க.சிவா பிள்ளை அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்டு “லண்டனில் பாடசாலைக் கல்வி முறைமை- இலங்கையின் கல்வி முறைமையுடனான ஒப்பீடு” எனும் தலைப்பில் சிறப்புக்  கருத்துரை நிகழ்த்தினார். அதிதிப் பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.