சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகஸ்தென்ன பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.