சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை அணிதிரட்டுதல் எனும் பிரதான நோக்குடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (24.01.2025) யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.அகிலன் கதிர்காமர், சிரேஷ்ட விரிவுரையாளர்களான இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணா, ஸ்ரீகாந்தராஜா சிவகாந்தன், அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் ந.தயாபரன், தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டின் மாகாணப் பொறுப்பதிகாரி உமாநாத், மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் இ.கிருஸ்ணகுமார், தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர்கள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.





