இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் சிறிலங்காவுக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா பெப்ரவரி 03ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. சிறிலங்காவுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு ருவாண்டா எதிர்பார்ப்பதாக உயர் ஸ்தானிகர் இதன் போது வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை விரிவுபடுத்த இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆபிரிக்க விவகார பிரிவின் பணிப்பாளர் நாயகம் வருண வில்பத ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.





