சுவிஸில் மரண வீட்டிற்குச் சென்றவர் திடீர் உயிரிழப்பு

புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வந்த யாழ்.தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்தவர் மரண வீட்டுக்குச் சென்ற போது திடீர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

சம்பவத்தில் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த கந்தையா ஜெயானந்தன்( வயது- 64 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.