செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அம்பிலிபிட்டிய உப பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத் இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து, 03 கிலோ 150 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக செவனகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





