இலங்கையின் சுதந்திரதினத்தைத் தமிழர் தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எதிர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (04-02.2025) காலை-09 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.





