டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்த நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டொன் பிரியசாத் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.




