நாரிகம கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு

காலி, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரிகம கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் 25 வயதுடைய யுவதியுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் நேற்றைய தினம் நாரிகம கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இரு வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.