12ம் திகதி தையிட்டியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மக்களின் பூரண ஆதரவை கோரியுள்ள அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தையிட்டி தொடர்பில் எமது பொதுவான நிலைப்பாட்டை ஊடகங்களிற்கும் அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் முன்வைப்பதற்காக இந்தஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.
தையிட்டியில் 140 பரப்பளவு காணி சட்டவிரோதமாக, சட்டத்திற்கு முரணாண வகையில இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு,எந்த ரீதியான சட்டரீதியான அனுமதிகளோ எதனையுமோ பெறாமல்,ஒரு சர்வாதிகார மனோநிலையில் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்துடன்; மிகப்பிரமாண்டமான சட்டவிரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு,எந்த தடையும் இன்றி பூஜை வழிபாடுகள் விகாரை என்ற பெயரிலே இடம்பெறுகின்றன.
இதற்கு எதிராக நாங்கள் நான்கைந்து வருடங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட போதிலும்,எமக்கான நீதிகளோ நியாயங்களோ வழங்கப்படாத இடத்து,நாங்கள் கடந்தஇரண்டு வருடங்களாக போராட்டங்களை நடத்திவருகின்றோம்.
அந்த வகையில் எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான 8 பரப்பு காணியை சட்டவிரோத கட்டுமானத்திற்காக கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.
கணவரின் பேரனானரின் காணிகளும் அங்கே உள்ளன எம்மிடம் இதற்காக ஆவணங்கள் உள்ளன,தகுதியான ஆதாரங்கள் உள்ளன.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்த உண்மை நிலைமைய வெளிப்படுத்தவேண்டும்.
கடந்த 31- 1- 25 கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்குபற்றியிருந்தார். அந்த இடத்திலே எங்கள் பிரச்சினை எழுப்பப்பட்டபோது மாற்றுக்காணிகளை வழங்கலாம் என்ற தொனியில் ஆளுநரும் அர்ச்சுனாவும் இந்த பிரச்சினையை திசைதிருப்பினார்கள்.
மாற்றுக்காணி என்பதற்கு காணி உரிமையாளர்களாகிய நாம் எந்த விதத்திலும் சம்மதிக்கப்போவதில்லை என்பதிலே நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
விகாரை என்பது முற்றிலும் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டுள்ளது நாம்அந்த இடத்தில் மாற்றுக்காணிக்கு சம்மதிப்போமானால் எமது காணிகளிற்கான உறுதியை அவர்களிற்கு வழங்கவேண்டிய கடப்பாட்டில் இருப்போம்.
நாம் மாற்றுக்காணிகளை பெற்றுவிட்டால் எமது உறுதிகள் அவர்களிற்கு சென்றுவிட்டால், விகாரை சட்டபூர்வமான கட்டிடமாக கருதப்படும் அதன் பின்னர் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழே விகாரையின் மேலதிக கட்டுமானங்களிற்காக எங்களிடம் இருக்கின்ற மேலதிக காணிகளையும் அவர்கள் சுவீகரிப்பார்கள். இதற்கு நாமே வழிகோலுவதாக அமையும்.
இவ்வாறான சட்டரீதியான பல சிக்கல்கள் இருக்கின்ற போது இவை எதனையும் கருத்தில் கொள்ளாது, தெரிந்தோ தெரியாமலோ மாற்றுக்காணிகளை நாங்கள் எதிர்க்கின்றோம் என்ற தகவலை வழங்கியிருந்தார்கள் அதனை நாம் முற்றிலும் எதிர்க்கின்றோம்.
எமது காணிதான் எமக்கு வேண்டும்.
மேலும் அந்த இடத்திலே நாங்கள் போராட்டங்களை நடத்துகின்ற போது,எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல் அகிம்சை வழயில் ஈடுபடுகின்றோம்
அங்கே வரும் சிங்கள சகோதாரர்களிற்கு அந்த இடத்தின் நிலைப்படு எமது நிலைப்பாடு அது சட்டவிரோத கட்டிடம் என்பதை உணர்த்துகின்ற போது, அந்த இடத்திலே பொலிஸாரினால் எங்களிற்கு எதிராக வழக்புகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை ஏன் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ்; கொண்டுசெல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்திடம்கருத்து கேட்கின்றார்கள்.
ஐசிசிபீஆர் தெரிவிப்பது என்ன? இனமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஏதாவது ஒரு போராட்டம் இடம்பெற்றால் கருத்து வெளியானால், அந்த நபர்கள் கைதுசெய்யப்படவேண்டும் என ஐசிசிபீஆர் தெரிவிக்கின்றது.
எனினும் அந்த சட்டத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால்,தையிட்டியில் இன மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது யார் என்று பார்த்தால் அந்த சூழ்நிலையில் எங்களிடம் உறுதி உள்ளது,அப்பாவி மக்களின்காணிகள்பறிக்கப்பட்டுள்ளன, அந்த இடத்தில் அந்த வழக்கை யாருக்கு எதிராக தாக்கல் செய்யவேண்டும். சட்டவிரோத கட்டிடத்திற்கு வரைபடங்கள் கீறிக்கொடுத்தவர்கள்,சட்டவிரோதமாக அனுமதிவழங்கியவர்கள், நிதிபங்களிப்பை வழங்கியவர்கள்,இராணுவதளபதிகள்,அந்த இடம் சட்டவிரோதம் என தெரிந்தும் அந்த இடத்திலே பூஜை செய்தவர்கள்,இவர்களிற்கு எதிராகதான் அந்த சட்டம் இருக்கவேண்டும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிற்கு எதிரானதாகயிருக்க கூடாது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு எதிராக இந்த சட்டத்தை பயன்படுத்துகின்ற நாட்டிலேதான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஆகவே ஊடகங்கள் உட்பட சகல மக்களினதும் ஒத்துழைப்பும் எங்களிற்கு தேவை.
கடந்த யாழ்மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேஇந்த கட்டிடம் சட்டவிரோதமானது என கஜேந்திர குமார் பொன்னம்பலம்தெரிவித்த கருத்தினை தொடர்ந்து பௌத்த மகாசம்மேளனம்என்ற பெயரிலே கடிதமொன்று மாவட்ட செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்திலே இந்த தையிட்டி திஸ்ஸவிகாரை புராதனமானது எனவும்,அதற்கு 14 பரப்பு காணி முன்னைய காலத்திலே இருந்ததாகவும்,: தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சுவீகரிக்கப்படவேண்டிய காணிகள் மக்களிடம் இருப்பதாகவும் அந்த காணிகளை சுவீகரித்து தருமாறும் அந்த பௌத்த அமைப்பு கோரியுள்ளது.
மேலும் பல கட்டிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்த மகாசம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்திற்கு மாவட்ட செயலாளர் இதுவரை பதில் அனுப்பவில்லை.
நாங்கள்அந்த இடத்திலே போராடியிருக்கின்றோம் ஆனால் இப்படியான ஒரு கடிதம் வந்த செய்தியை எங்களிற்கு தெரிவித்திருக்கவேண்டும், யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்ட வேளையிலேயே இந்த கடிதம் குறித்து தொவித்திருக்கவேண்டும்.
• மாவட்ட செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ இந்த கடிதத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கவேண்டும் அல்லது இதன் உண்மை தன்மையை அறியமுயன்றிருக்கவேண்டும்.
•
ஒரு மாதத்திற்கு முன்னர் இதேபோன்ற கடிதமொன்று சிங்கள அமைப்பொன்றிடமிருந்து வந்துள்ளது, அவர்கள்யாழ்ப்பாணத்தில் தங்களிற்கு காணிகள் இருப்பதாகவும் அவற்றை வழங்கவேண்டும் எனவும் கோரியவேளை உடனடியாக பதிலளித்திருக்கின்றார்கள் உங்கள் உறுதிகளை காண்பியுங்கள் என யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
அதேபோன்று இந்த கடிதத்திற்கும் பதில் கடிதத்தை வழங்கவேண்டும்.
எங்களிடம் உறுதி இருக்கின்றது,இதன் உறுதி தன்மையை கச்சேரியிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். கிட்;டத்தட்ட 100 ஆண்டுகளிற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டவைகள் எமது காணிகள், பூர்வீகம் பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த காணிகள.;.
தேவநம்பிய தீசன் காலத்தில் இந்த காணிகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் தேவநம்பிய தீசன் வழங்கிய உறுதிகளை அவர்கள் காட்டட்டும்.மாவட்ட செயலாளரும் ஆளுநரும் இது குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தவேண்டும்.
இது தேவநம்பிய தீசன் காலத்து விகாரை எனின் தொல்பொருட்களை காண்பியுங்கள். அவை அழிவடைந்திருந்தாலோ சிதைவடைந்திருந்தாலோ அதன் சிதைவுகளை காண்பியுங்கள்.
தொல்பொருள்சட்டத்தின் கீழ் அவை அழிவடைந்திருந்தால் அதன் சிதைவுகளை தான் பாதுகாக்கவேண்டுமே தவிர, அந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை கட்டிவிட்டு விகாரைகளை கட்டிவிட்டு அதனை பாதுகாப்பதற்கு இத்தனையாயிரம் படையினரை பயன்படுத்தவேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கவில்லை.
எங்கள் போராட்டத்திற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பைவழங்கியுள்ளன, நாங்கள் பெரும் நன்றி உணர்வோடு இந்த ஊடகங்களை பார்க்கின்றோம்.
மேலும் 12ம் திகதி பூரணை தினத்தினை முன்னிட்டு நாங்கள் எங்கள் வழமையான தொடர்ச்சியான போராட்டத்தினை அந்த இடத்திலே முன்னெடுக்க இருக்கின்றோம்.அந்த போராட்டத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான தென்னிலங்கை அமைப்பான பார்ள் உட்பட வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கத்தினர் மீனவர் சங்கத்தினர் உட்பட பலர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் எங்கள் போராட்டத்திற்கு பெரும் ஆதரவை வழங்கவேண்டும்.
தொடர்ந்து அந்த இடத்திலே நிற்க முடியாவிட்டாலும் 12ம் திகதி மதியம் முதல் 6 மணிவரையாவது உங்களது ஆதரவை வழங்குங்கள்.
அரசஅதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலே நிறைய தவறுகளை இழைத்துவிட்டனர்.அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இனிமேலாவது அவற்றை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு சமர்ப்பிக்க முன்வரவேண்டும்.ஜனாதிபதிக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
தெரிந்தோ தெரியாமலே தையிட்டியில் கைவத்துவிட்டீர்கள் நீங்கள் எடைபோட்டதை போல சாதாரண மக்கள் இல்லை பலபல வரலாற்றை கொண்டவர்கள்.
எங்கள் முதியோரின் முன்னோரின் ஆசியுடன் இந்த போராட்டத்தை நாங்கள் செய்கின்றோம்.
தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும்.அதனை நாங்கள் விரும்பவில்லை , தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலைநாட்டவேண்டும்.





