பிரபல தொழிலதிபர் ஹரி ஜெயவர்தன காலமானார்

பிரபல தொழிலதிபரும் வர்த்தகருமான டொன் ஹெரோல்ட் ஸ்டாசன் ஜெயவர்தன தனது 82 ஆவது வயதில் காலமானார்.

இவர் ஹரி ஜெயவர்தன என்று அழைக்கப்பவார்.

ஜெயவர்த்தன Melstacorp PLC நிறுவனத்தின் தலைவராவார்.  இலங்கையில் டென்மார்க் தூதரகத்தின் கௌரவ துணைத் தூதராக பணியாற்றியுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கையால் இலங்கையின் செல்வந்தர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.

அமெரிக்காவிற்கு வெளியே போர்ப்ஸ் பத்திரிக்கையின் சிறந்த நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அங்கரீகாரம் பெற்ற இலங்கையின் முதல் இரண்டு நிறுவனங்களான டிஸ்டில்லரீஸ்  மற்றும் எய்ட்கன் ஸ்பென்ஸ் ஆகிய நிறுவனங்களில் தலைவர் பதவியை வகித்தார் ஹரி ஜெயவர்தன.