அநுராதபுரம் – பூனேவ பொலிஸ் பிரிவில் பரணஹல்மில்லேவ துடுவெவ வீதியில் நேற்று சனிக்கிழமை (18) மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எடவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
பரணஹல்மில்லேவ பகுதியில் இருந்து துடுவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், பின்னால் அமர்ந்திருந்தவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





