பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னிலாவ பிரதேசத்தில், சட்ட விரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்பித்திகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 262 லீற்றர் (350 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வனமாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





