போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறையிட வட்ஸ் அப் இலக்கம் அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க வட்ஸ் அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்கள், பிரச்சினைகள் மற்றும் வீதிகளில் இடம்பெறும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் முறையிட 071 4033 300 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

இந்த சேவையானது 24 மணிநேரமும் இயங்கும்.