மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரைக்கு அமைவாக வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிக்கப்படாத 10 நிறுவை அளவை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மாவட்ட ஆய்வுகூட நிலைய பொறுப்பதிகாரி வீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு , பட்டிப்பளை , போரதீவு பற்று வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 110 இடங்களில் மேற்கொள்ள ப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிக்கப்படாத 10 நிறுவை அளவை உபகரணங்களும் 4 முத்திரையிடாத நிறுவை அளவை உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட நிறுவை அளவை உபகரணங்களை அளவீட்டு அலகுகளும் நியமங்களும் சேவைகளும் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய மாவட்ட நீதிமன்றத்திற்கு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கவுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.





