மன்னார் – தோட்டக்காட்டில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில்  உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.