மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் வயோதிபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டதாக நுகேகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் 580 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




