மின்சார சபை வலைத்தளம் 2 வாரங்களாக மந்தம்

இலங்கை மின்சார சபையின் நிகழ்நிலையில் கட்டணம் செலுத்தும் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பயனாளிகளால் அணுக முடியாத நிலை தொடர்கிறது.

http://payment.ceb.lk/ என்ற குறித்த வலைத்தளம் இயங்காமை குறித்து வினவ இலங்கை மின்சார சபையைத் தொடர்பு கொண்ட போதும் அம்முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

மேற்குறித்த குளறுபடிகளினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.