முச்சக்கரவண்டி மோதி முதியவர் உயிரிழப்பு!

ஹோமாகம – கொட்டாவை ஹைலெவல் வீதியில் வலவ்வ சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகமவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த  முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.