முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பயன்படுத்தி வாகனத்தை வடிவமைத்து, அதற்கான போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நாளை (20) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பில் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.