யாழ்.மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (15.01.2024) காலை-08.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக முன்றலில் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், மாவட்டச் செயலக அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




