இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ்.மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபனுக்கான சேவைநலன் பாராட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (07.02.2025) பிற்பகல்- 02 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்டப் பதில் அரசாங்க அதிபரால் விழா நாயகன் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டதுடன், மாவட்டப் பதில் அரசாங்க அதிபரினால் மெச்சுரையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






