22 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பத்தம்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக ரம்புக்கனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 15,000 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், தப்பிச் சென்ற பிரதான சந்தேக நபர் பத்தம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் வைத்து 17 மதுபான போத்தல்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் அனுமதிப்பத்திரம் இன்றி அரச மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.



