வடக்கு- கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மழை படிப்படியாகக் குறைவடையும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (24.01.2025) முதல் படிப்படியாக மழை குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  வியாழக்கிழமை (23.01.2025) இரவு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும்-28 ஆம் திகதி வரை மிகவும் குறைவான மழையுடனான வானிலை நிலவும். எனினும், ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அறுவடையை மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் சிறிய அளவிலான மழையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களுடன் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.