தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு யாழ்.உடுப்பிட்டியில் பட்டப் போட்டி நிகழ்வு தைப்பொங்கல் நாளான செவ்வாய்க்கிழமை (14.01.2025) முற்பகல்-11 மணியளவில் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
குறித்த போட்டியில் பிரதேச இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல வர்ணங்களில் பருந்துப் பட்டங்களை வானில் பறக்க விட்டனர். குறித்த பட்டங்களில் உயரமாக விடப்பட்ட பட்டங்களிற்கு நடுவர்களினால் தீர்ப்பளிக்கப்பட்டுப் பெறுமதியான பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. பட்டப் போட்டியில் முதலாம் இடத்தினைக் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த க.துசனந்தும், இரண்டாமிடத்தினை சி.உஷாந்தனும், மூன்றாவது இடத்தினை மிதுஷனும் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் உடுப்பிட்டியைச் சேர்ந்த நடராசா நந்தகுமார் நிகழ்வுக்கான நிதி அனுசரணையை
வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




